அரசு ஊழியர் படுகொலை சம்பவம் - 15 பேர் மீது வழக்கு

குமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே உள்ள மைலோடு பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன் மகன் சேவியர்குமார் (45). அரசு பஸ் டிப்போவில் மெக்கானிக்காக உள்ளார். நாம் தமிழர் கட்சியில் தக்கலை ஒன்றிய தலைவராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் சேவியர்குமாரை அதே சர்ச்சில் அன்பிய தலைவர் பொறுப்பு வகிக்கும் வின்சென்ட் என்பவர் பாதிரியார் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளார். இதனிடையே ஆலய வளாகத்தில் உள்ள பாதிரியார் இல்லத்தில் சேவியர்குமார் இறந்து கிடப்பதாக ஜெமினிக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்ததும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். மதியம் தொடங்கிய போராட்டம் 12 மணி நேரத்துக்கு பின் அதிகாலை 2 மணியளவில் சேவியர் குமார் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கொலை தொடர்பாக தி மு க ஒன்றிய செயலாளரும், அரசு வழக்கறிஞர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன், மேலும் ஒரு பாதிரியார் உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேவியர் குமாரின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சேவியர் குமாரின் உடலை வாங்க மறுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பேராட்டம் நடந்தது.