சாதி கலவரம் தொடர்பாக 23 பேர் மீது வழக்கு

சாதி கலவரம் தொடர்பாக 23 பேர் மீது வழக்கு

சாதி கலவரம்

சோக்காடி கிராமத்தில் சாதி கலவரம் தொடர்பாக 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோக்காடி கிராமத்தில் ஏற்பட்ட சாதி கலவரம் தொடர்பாக இருதரப்பினர் உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் KRP டேம் அடுத்த சோக்காடி கிராமத்தில் ஊர் மத்தியில் கடந்த சில வருடங்களாக புதுப்பிக்கப்பட்டு வரும் மாரியம்மன் கோவில் கட்டுமானப்பணியின் போது கிரைனைட் தூசி துகள்கள் பட்டியலின மக்களின் குடியிருப்பு பகுதிக்கு பரவியதின் பேரில் அந்த தூசி துகள்கள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் இருக்க வேலை செய்யும் பகுதியை சுற்றிலும் திரை அமைத்து வேலைகளை செய்ய பட்டியலின இளைஞர்கள் கூறியதின் பேரில் இருதரப்பினரிடையே தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பினர்களுக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்ட நிலையில் இரு பிரிவினர் இடையே மோதல் அதிகரித்த நிலையில் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டும், பட்டியல் இன மக்களின் வீடுகள் மீது கற்களை வீசி தாக்கியும் அங்கிருந்த கீற்று கொட்டகைகள் மீது தீ வைத்தும் தகராறில் ஈடுபட்டனர். இதனால் சோக்காடி பகுதியே பெரும் பதற்றத்துடன் காணப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தலைமையிலான 100 க்கும் மேற்ப்பட்ட போலீசார் சோக்காடி பகுதியில் பாதுகாப்பு பணியி ஈடுபட்டுள்ளனர். மேலும் கலவரம் தொடர்பாக அதிமுக ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜா உட்பட 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது பட்டியலினத்தை சேர்ந்த 6 பேரும், மாற்று சமூகத்தை சேர்ந்த 7 பேரும் என 13 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு உள்ள நிலையில் இவர்கள்மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தலைமறைவாக உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜா மற்றும் இந்த கலவரத்தில் ஈடுபட்ட மேலும் சிலரை வீடியோ ஆதாரங்களை கொண்டு தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags

Next Story