குலசேகரத்தில் 3 கனரக லாரி டிரைவர்கள் மீது வழக்கு
பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்
குமரி மாவட்டத்தில் இருந்து தினமும் கேரளாவுக்கு கனிம வளங்கள் ஏற்றிக்கொண்டு கனரக லாரிகள் செல்கிறது. அதிவேகமாக லாரிகள் செல்வதால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. காலை, மாலை வேளைகளில் அதிவேகமாக லாரிகள் செல்கிறது.
இதை கட்டுப்படுத்த கேட்டு பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தினார்கள். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கனிம வள லாரிகள் செல்வதற்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பல பகுதிகளில் நேர கட்டுபாட்டை மீறி வாகனங்கள் சென்று வந்தன.இதனால் பல்வேறு இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்து வந்தனர்.
இந்த நிலையில் குலசேகரம் காவஸ்தலம் பகுதியில் வந்த வாகனங்களை குலசேகரம் போலீசார் பிடித்து டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அருமனை பகுதியை சேர்ந்த ராஜன், குமாரபுரம் பகுதியை சேர்ந்த வினுராஜன், நட்டாலம் பகுதியை சேர்ந்த வைகுண்டராஜன் ஆகியோர் மீது குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.