பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டவர்கள் மீது வழக்கு

பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டவர்கள் மீது வழக்கு

பாலஸ்தீன கொடி

கோவையில் பாலஸ்தீன கொடியை பறக்கவிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் பாலஸ்தீனுக்கு ஆதரவாக உலக நாடுகள் தலையிட வலியுறுத்தியும் இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதை கண்டித்து கடந்த 24 ம் தேதி அனைத்து ஜமாத், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது கோவை உக்கடத்தில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன கொடியை பறக்க விட்டதாக ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் அமைப்பை சேர்ந்த சபீர் அலி,மனித நேய ஜனநாயக கட்சியை சேர்ந்த அபுதாஹிர்,ரபீக் உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story