சென்னை அமைந்தகரை சிறுமி கொலை வழக்கு - கைதான பெண் வாக்குமூலம் !!

சென்னை அமைந்தகரை சிறுமி கொலை வழக்கு - கைதான பெண் வாக்குமூலம் !!

கைது

சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர்.

'சென்னை, அமைந்தகரை, மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த சர்புதீன் என்பவர் 01.11.2024 அன்று கே-3 அமைந்தகரை காவல் நிலையத்தில் 15 வயது சிறுமி இறந்து போனது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில் இறந்த போனவர் 15 வயது சிறுமி என்பதும் அவரது சொந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் என்பதும், சிறுமி கடந்த டிசம்பர் மாதம் 2023-ம் ஆண்டு முதல் முகமது நிஷாத் என்பவரின் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மேலும் போலீசாரின் விசாரணையில் இறந்து போன சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.

கடந்த 3 மாதங்களாக சிறுமியை அடிக்கடி சித்ரவதை செய்தும், துன்புறுத்தியும் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 31.10.2024 அன்று சிறுமியை தாக்கியதில் அவர் இறந்துள்ளது தெரியவந்தது.

அதன் பேரில் மேற்கண்ட சந்தேக மரணம் வழக்கானது கொலை வழக்கு மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு எதிரிகள் நிவேதா (எ) நாசியா(30), அவரது கணவர் முகமது நிஷாத்(36), லோகேஷ்(26), அவரது மனைவி ஜெயசக்தி(24), கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஸ்வரி(40) மற்றும் முகமது நிஷாத்தின் சகோதரி அடையாரைச் சேர்ந்த சீமா பேகம்(39) ஆகியோர் 02.11.2024 அன்று கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 6 நபர்களும் விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அமர்ந்தக்கரை சிறுமி கொலை வழக்கில் கைதான பெண் நாசியா அளித்த வாக்குமூலத்தில் சிறுமியின் மீது தன் கணவர் ஆசைப்பட்டதால் சிறுமியின் மீது திருட்டு பட்டம் சுமத்தி சித்திரவதை செய்ய ஆரம்பித்தேன் என்று வாக்குமுலத்தில் சிறுமியை சித்திரவதை செய்வதை ஒப்புக்கொண்டனர்.

கோவை தென்னம்பாளையத்தில் உள்ள எங்களது உறவினர் வீட்டுக்கு சென்ற போது சிறுமியின் தாயாரை சந்தித்து எங்கள் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக சிறுமையை அழைத்து செல்கிறோம் என அழைத்து வந்துள்ளனர். வீட்டு வேலைகளையும் செய்ய வைத்தோம் சம்பளம் தரவில்லை அவரது தாயையும் சந்திக்க விடவில்லை. என் கணவருக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் சிறுமியின் மீது என் கணவர் ஆசைப்படுவதாக சந்தேகப்பட்டேன். இதனால் ஏதாவது ஒரு காரணம் சொல்லி சிறுமையை சித்திரவதை செய்ய தொடங்கினேன்.

சிறுமியின் நெஞ்சு பகுதி உட்பட பல இடங்களில் அயன் பாக்ஸ் மூலம் சூடு வைத்தேன் சிறுமி மீது என் கணவருக்கு வெறுப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காக குழந்தை சரியாக பார்க்கவில்லை என்று பொய் சொல்லி கோபப்படுத்தினேன். எங்கள் வீட்டுக்கு வரும் என் கணவரின் நண்பர் லோகேஷ் அவரது மனைவி ஜெய் சக்தியிடம் சிறுமிக்கு திருட்டு பட்டம் கட்டினேன் என்னுடன் சேர்ந்து எனது கணவரும் சிறுமியை சித்திரவதை செய்ய தொடங்கினார்.

தீபாவளி அன்று லோகேஷ் ஜெயசக்தியின் கணவரின் சகோதரி சீமா பேகம் ஆகியோர் வீட்டுக்கு வந்திருந்தனர் மற்றொரு வேலைக்காரப் பெண் மகேஸ்வரியும் உடன் இருந்தார். அப்போது எனது மகனின் பிறப்புறுப்பை பிடித்து இழுத்து விட்டதாக குற்றம் சாட்டி சத்தம் போட்டேன். இதனால் எல்லாரும் சேர்ந்து சிறுமையை அடித்ததில் சிறுமி மயங்கி விழுந்தார். இவர் இறந்து விட்டதை அறிந்து குளியல் அறையில் உடலை வைத்துவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டோம் துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க வீடு முழுவதும் ஊதுபத்தியே ஏற்றி விட்டு சென்றோம். சிறுமியின் உடலை அப்புறப்படுத்த முடியாமல் போலீசரக்க தகவல் அளித்தோம் இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.

சிறுமியின் குடும்பம் ஏழ்மையானது என்பதால் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் சிறுமியின் உடலை சொந்த ஊர் கொண்டு செல்ல பெற்றோரிடம் பணம் இல்லாததால் சென்னையில் சிறுமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags

Next Story