சிறார் வதை : பக்கத்து வீட்டுகாரர் போக்சோவில் கைது

சிறார் வதை : பக்கத்து வீட்டுகாரர்  போக்சோவில் கைது
பைல் படம்
கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை மிரட்டல் விடுத்த பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் முதப்பன்கோடு பகுதியை சேர்ந்த ரவீந்திரன் (52). சம்பவ தினம் இவரது பக்கத்து விட்டை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் சர்ச்சுக்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது ரவீந்திரன் சிறுமியை அவரது வீட்டில் கொண்டு விடுவதாக கூறி ஏமாற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்து உள்ளார். அப்போது அந்த சிறுமி கதறி அழுது உள்ளார். அப்போது அந்த சிறுமியிடம், நீ சத்தம் போட்டு தகவல் வெளியில் தெரிந்தால் உன்னையும் உனது தாயாரையும் வீட்டோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. சிறுமி சம்பவத்தை பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து, இது சம்பந்தமாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதனால் தலைமறைவான ரவீந்திரனை போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து, போலீசார் நேற்று கைது செய்தனர். தற்போது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags

Next Story