பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: தொழிலாளிக்கு 8 ஆண்டு ஜெயில்

பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: தொழிலாளிக்கு 8 ஆண்டு ஜெயில்

பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: தொழிலாளிக்கு 8 ஆண்டு ஜெயில்

பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷம்: தொழிலாளிக்கு 8 ஆண்டு ஜெயில்
பிளஸ்-1 மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தொழிலாளிக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. சேலம் மரவனேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 34). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அழகாபுரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அந்த வழியாக வந்த பிளஸ்-1 மாணவி ஒருவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக அம்மாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், தினேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தினேசுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

Tags

Next Story