உண்டியல் காணிக்கையில் திருட்டு - கல்லூரி உதவி பேராசிரியை கைது

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் காணிக்கையாக செலுத்திய பணத்தை எண்ணும் பணியின் போது , ஒரு லட்சம் ரூபாயை திருடிய கல்லூரி உதவி பேராசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

பழநி மலை கோயிலில் நேற்று நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கை முழுமையாக சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த போது ரூ. 1 லட்சம் பணம் திருடிய கல்லூரி உதவி பேராசிரியரான ஸ்வேதா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் எண்ணிக் கொண்டிருந்த பணத்தை திருடி மறைத்து வைப்பது சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது தெரிய வந்தது.

இதையடுத்து கோயில் பெண் ஊழியர்கள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர்.அப்போது ஸ்வேதா கோவில் உண்டியல் பணத்தில் இருந்து சுமார் ஒரு லட்சம் ரூபாயை திருடி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தைப் கோவில் ஊழியர்கள் பறிமுதல் செய்து, திருட்டில் ஈடுபட்ட அவரை அடிவாரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பணம் திருட்டில் பிடிபட்ட அவர் பழனி அருள்மிகு பழனியாண்டவர் பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

Tags

Next Story