பாபநாசத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

பாபநாசத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

தற்கொலை

பாபநாசத்தில் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை போலீசார் விசாரணை.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவில் தேவராயன்பேட்டை வெள்ளாளர் தெருவில் வசித்து வருபவர் குமரேசன்வயது 55 இவரது மகள் பிரியதர்ஷினி வயது 19 இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி மாணவி பிரியதர்ஷினி கும்பகோணம் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் பெற்றோர்கள் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மூன்று நாட்களாக கல்லூரி செல்லாத மாணவி பிரியதர்ஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் வெளியில் சென்று வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து பார்த்து அதிர்ச்சடைந்தனர். உடனடியாக பாபநாசம் காவல் நிலையத்திற்கு மகளின் தந்தை குமரேசன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து பாபநாசம் போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Next Story