போலி நகை கொடுத்து₹ 25.38 லட்சம் மோசடி

போலி நகை கொடுத்து₹ 25.38 லட்சம் மோசடி

காவல்துறை நடவடிக்கை 

மார்த்தாண்டத்தில் போலி நகை கொடுத்து ₹ 25.38 லட்சம் மோசடி செய்ததில் வங்கி மேனேஜர் உட்பட 4 பேர் மீது புகார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. இவர் அழகிய மண்டபம் தனியார் பைனான்ஸில் மேனேஜராக உள்ளார். கடந்த 23ஆம் தேதி மார்த்தாண்டத்தை சேர்ந்த ஒரு வங்கி ஊழியர் இவரை செல்போனில் தொடர்பு கொண்டு வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பி வைப்பதற்காக ₹ 25.38 லட்சம் பணம் கொண்டு வருமாறு கூறியுள்ளார். இதை அடுத்து அஞ்சு உடன் பணியாற்றும் ஊழியருடன் பணத்தை கொண்டு சென்றுள்ளார். வங்கியின் வெளியே வைத்து நகையை கொடுத்து பணத்தை பெற்றுள்ளார். இந்த நிலையில் வாடிக்கையாளர் அருண் ஜோஸ் என்பவரை அழகிய மண்டபம் அழைத்துச் சென்று அவர் முன்னிலையில் சோதனை செய்தபோது அது போலி நகை என தெரிய வந்தது.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அஞ்சு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சம்பந்தப்பட்ட வங்கி மேனேஜர் மற்றும் ஊழியர்கள் இருவர் வாடிக்கையாளர் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க கூறியுள்ளார்.

Tags

Next Story