மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது புகார்

மனைவியை கொடுமைப்படுத்திய கணவர் மீது புகார்

மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (24) இவருக்கும் சங்ககிரியை சேர்ந்த இன்ஜினியரான கார்த்திகேயன் (27) என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. கார்த்திகேயன் அரியலூரில் உள்ள சிமெண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. விஷ்ணுபிரியாவிடம், நகை, பணம் கேட்டு அடிக்கடி அவரை கார்த்திகேயன் தாக்கியுள்ளார். இதனையடுத்து சேலம் போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் எனது தாய், 4 கோடி மதிப்புள்ள சொத்தினை எனக்கு எழுதி கொடுத்துள்ள சொத்தை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி என்னை கணவர் மிரட்டினார். ஆனால் நான் மறுப்பு தெரிவித்து விட்டேன். இதனால் என்னை விவாகரத்து பெற்று செல்லுமாறு கூறினார். இதுபற்றி எனது பெற்றோரிடம் நான் தெரிவிக்கவில்லை. மேலும் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது அவர் என்னை அடித்ததால் குழந்தை வயிற்றிலேயே இறந்துவிட்டது. ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். இதையடுத்து சண்டை அதிகமான போது என்னை எனது வீட்டில் விடுவதற்காக வாழப்பாடிக்கு பேருந்தில் வந்தபோது எனது முகத்தில் அவர் குத்தி கீழே இறக்கி விட்டு சென்றார். அவா் தனது அத்தை மகளை திருமணம் செய்வதற்காக என்னை கொடுமைப்படுத்தினார் என்று மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து விசாரணை நடத்தும்படி அம்மாபேட்டை மகளிர் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story