குற்ற செயல்கள் : வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

குற்ற செயல்கள் : வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

குண்டர் சட்டத்தில் கைது 

கஞ்சா விற்றதை தட்டி கேட்ட புரட்சி பாரதம் கட்சி நிர்வாகியை வெட்டி கொன்ற 3 வாலிபர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

திருத்தணி அடுத்த தாழவேடு காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் மனோ என்கிற மனோகரன், 23, விமல் என்கிற விமல்ராஜ், 22, மற்றும் அருண்குமார், 23. மூவரும் நண்பர்கள். இவர்கள் கஞ்சா, மதுபாட்டில்கள் விற்பனை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது திருத்தணி மற்றும் கனகம்மாசத்திரம் ஆகிய காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதுதவிர ஒன்றரை மாதத்திற்கு முன்பு தாழவேடு காலனி சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலர் அசோக்குமார், 37, கஞ்சா விற்பனையை கண்டித்ததால், இவர்கள் மூவரும் சேர்ந்து, பட்டப்பகலில் அசோக்குமாரை வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து திருத்தணி போலீசார் மூவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்.பி., சீபாஸ் கல்யாண், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மூவரையும், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவிட வேண்டும் என, மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பிரபுசங்கர் மூவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு உத்தரவிட்டார்.

Tags

Next Story