தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு - வடமாநில வாலிபர்கள் கைது

கைது செய்யப்பட்டவர்கள்


தாராபுரம் அருகே குண்டடம் பகுதி தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த வடமாநில வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாராபுரம் குண்டடம் தொட்டியந்துறை செட்டிக்காட்டு தோட்டத்தில் உள்ள கோழிப் பண்ணையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் மதுவிலக்கு காவல்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோழி பண்ணையில் வேலை செய்து வந்த தாரிக் முண்டால் (வயது 33)சுகுமார் முண்டால், பர்ஹானா, அனுப் சர்தார் (வயது 22), ஆகியோர் 1.800 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தாராபுரம் மதுவிலக்கு போலிசார் வடமாநிலத்தொழிலாளர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story



