சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை - இருவர் கைது.

சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை - இருவர் கைது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே தீட்டுக்கல் பகுதியில் கடந்த 21 ஆம் தேதி தனியார் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. காயங்களோடு சிறுத்தையை மீட்ட வனத்துறையினர் வடபகுதியில் விட முயன்ற போது அது பரிதாபமாக உயிரிழந்தது. இந்நிலையில் கம்பியால் சுருக்கு வைக்கப்பட்டு சிறுத்தை இறந்ததை உறுதி செய்த வனத்துறையினர் தனிக்குழு அமைத்து சுருக்கு வைத்தவர்களை குறித்து விசாரணை செய்தனர். விசாரணையின் போது காட்டுபன்றியையயை வேட்டையாட கம்பியால் சுருக்கு வலை வைத்ததை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் தீட்டுக்கல் பகுதியை சேர்ந்த பிராசாந்த் (26) மாரி (50) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags

Next Story