வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்: மூன்று பேர் மீது வழக்கு பதிவு
காவல் நிலையம்
நடைக்காவு பகுதியை சேர்ந்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல். 3 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கடை அருகே நடைக் காவு பகுதியை சேர்ந்தவர் ஐடன்சோனி.வழக்கறிஞர். சம்பவத்தன்று முஞ்சிறைப் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜெய ராஜ், சஜின், லாரன்ஸ் ஆகியோர் வந்து நீ எப்படி இந்த பகுதிக்கு வரலாம் உன்னை இந்த பகுதியில் நாங்கள் பார்க்ககூடாது எனக்கூறி கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இது குறித்து ஐடன் சோனி புதுக்கடை காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story