பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பைக் மோதிய விபத்தில் உயிரிழப்பு

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பைக் மோதிய விபத்தில் உயிரிழப்பு

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பைக் மோதிய விபத்தில் உயிரிழப்பு

பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர் பைக் மோதிய விபத்தில் உயிரிழப்பு

தமிழகத்தில் பங்குனி உத்திரம், தைப்பூசம் உள்ளிட்ட விசேஷத்தை முன்னிட்டு பல பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் குழுகுழுவாக பாதயாத்திரை பயணமாக நடந்து செல்வர். இடம் உள்ள இடங்களில் பாதயாத்திரை செல்வோருக்காக தனி நடை பாதை அமைக்கப்பட்டுள்ளது.ஒரு சில குழுக்கள் காலையில் துவங்கி மாலையில் வெளிச்சம் உள்ளவரை நடந்து விட்டு பின் ஓய்வு எடுத்துவிட்டு மறு நாள் பாதயாத்திரையைத் துவக்குவர். அந்த வகையில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர், நாமக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி அடுத்த மேற்குபாலப்பட்டி அம்மன் நகரை சேர்ந்தவர் தங்கராசு (59). அவர், அதே பகுதியை சேர்ந்த சசிகலா, மலர்கொடி ஆகியோருடன், பழனி செல்வதற்காக பாதயாத்திரை குழுவினருடன் புறப்பட்டு சென்றார். இன்று அதிகாலை, 5 மணிக்கு, நாமக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில், கீரம்பூர் சுங்கச்சாவடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தங்கராசு மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தங்கராசுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி, இன்று காலை 8 மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக, பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பழனிக்கு பாதயாத்திரை சென்றவர், சாலை விபத்தில் பலியான சம்பவம், அவரது கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story