பெண்ணிடம் அநாகரிகமாக நடக்க முயன்ற டிரைவர் - அரிவாளை காட்டியதால் டிரைவர் ஓட்டம் !!
விசாரணை
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி சேர்ந்த பெண் ஒருவர் உறவினரின் துக்கநிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தைகளுடன் ராஜபாளையம் செல்ல வேண்டி இருந்த நிலையில் கணவர் வெளியூர் சென்றதால் ஆக்டிங் டிரைவரை தெரிந்த நபரிடம் கூறி அழைத்துள்ளார்.
அவர் வீட்டிற்கு வந்ததும் தனது செல்போனை எங்கோ வைத்து விட்டு தேடிய பெண் போன் பண்ணுமாறு அந்த டிரைவரிடம் கேட்டுள்ளார், அவரும் போன் செய்து ரிங்டோன் கேட்டா அவர் போனை எடுக்க சென்றபோது ஆக்டிங் டிரைவர் பின்னாலே சென்று தவறாக நடக்க முயன்று உள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டிலிருந்து கத்தியை எடுத்தது டிரைவரை மிரட்டி வாக்குவாதம் செய்துள்ளார். தொடர்ந்து அநாகரிகமாக நடக்கும் முயன்ற நிலையில் வீட்டிலிருந்த அரிவாளை எடுத்து வந்து பெண் மிரட்டி உள்ளார். பின்னர் தோழி மற்றும் கணவருக்கு போன் செய்ததாகவும் இதையடுத்து டிரைவர் அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறி புகார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக் குறித்து பெண் தரப்பில் இருந்து கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் தரப்படவில்லை. இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.