டூவீலர் மோதி முதியவர் படுகாயம்

டூவீலர் மோதி முதியவர் படுகாயம்

குமாரபாளையத்தில் நடந்து சாலையை கடக்கும் போது டூவீலர் மோதிய விபத்தில்  முதியவர் படுகாயமடைந்தார்.

குமாரபாளையத்தில் நடந்து சாலையை கடக்கும் போது டூவீலர் மோதிய விபத்தில்  முதியவர் படுகாயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சடையம்பாளையம் செல்லும் சாலை, பெரியார் நகரில் வசிப்பவர் ராஜ், 63. ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர். இவர் பிப். 18ல் காலை 05:45 மணியளவில் சடையம்பாளையம் சாலையை, நடந்து கடந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த டி.வி.எஸ். விக்டர் வாகன ஓட்டுனர் இவர் மீது மோதியதில், இடது கால் முறிவு ஏற்பட்டு படுகாயடைந்தார். இவரை இவரது குடும்பத்தார் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து வழக்குபதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான, டூவீலர் ஓட்டுனர் அதே பகுதியைச் சேர்ந்த மளிகை கடை உரிமையாளர் கண்ணன், 51, என்பவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story