தப்பியோடிய கைதிகள் - வழுக்கி விழுந்து மாவு கட்டு சிகிச்சை

காவல்துறையின் போது தப்பி ஓட முயன்ற கோபிநாத், சங்கர் ஆகியோர் கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி அண்ணா நகர் நான்காவது தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம் வழக்கறிஞர் மற்றும் தொழில் அதிபரான இவருக்கும் இவரது சகோதரிகள் குடும்பத்திற்கும் இடையே சொத்து தகராறு இருந்துள்ளது இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு செந்தில் ஆறுமுகத்தை ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டு முன்பு வைத்து ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இந்தச் சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர் நடத்திய விசாரணையில் செந்தில் ஆறுமுகத்தை அவரது தங்கை ப்ரீத்தியின் கணவரான கோவில்பட்டியை சேர்ந்த கோபிநாதன் என்பவர் கூலிப்படையான சங்கர், மணிகண்டன், ராம்குமார், தமிழ்செல்வம், ஸ்ரீநாத் ஆகியோரை வைத்து கொலை செய்தது தெரிய வந்தது இதைத்தொடர்ந்து செந்தில் ஆறுமுகத்தின் மைத்தனர் கோபிநாதன் உள்ளிட்ட ஆறு பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் காவல்துறை விசாரணையின் போது தப்பி ஓட முயன்ற கோபிநாதன் மற்றும் சங்கர் ஆகியோர் கீழே வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டதில் இருவரது வலது கையும் முறிந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த மாதம் தொடர்ந்து கொலை நடைபெற்று வருவதால் தற்போது குற்றவாளிகள் வழுக்கி விழுந்து காயம் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story