அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - முன்னாள் ராணுவ வீரர்,மகன் கைது

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி - முன்னாள் ராணுவ வீரர்,மகன் கைது

சாமிநாதன்,சுனில் குமார்

மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மகன் கைது செய்யயப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே புள்ளவராயன்காடு கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் 70 . இவர் தனது மகனுக்கு மத்திய அரசு வேலை வாங்கி தர வேண்டும் என பெங்களூரில் வசித்து வரும் முன்னாள் ராணுவ வீரர் சாமிநாதன் மற்றும் அவரது மகன் சுனில் குமார் ஆகியோரிடம் 4 லட்ச ரூபாயை வங்கி மூலம் பணம் கொடுத்து பல மாதங்கள் ஆகியும் வேலை வாங்கித் தராத காரணத்தால் வடுவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைதொடர்ந்து சாமிநாதன் மற்றும் அவரது மகன் சுனில்குமாரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இதே போன்று சுற்றுவட்டாரங்களை பகுதியை சேர்ந்த 11 நபர்களிடம் தலா ரூ.2 லட்சம் வீதம் 20 லட்சம் ரூபாய் வரை பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இருவரையும் போலீசார் மன்னார்குடி சிறையில் அடைத்தனர்.


Tags

Next Story