கள்ளக்காதலுக்கு இடையூறு -மாமியாரை கொன்று எரித்த மருமகள், கள்ளக்காதலன்

ஊத்தங்கரை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை கொலை செய்து எரித்த மருமகள் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட சிங்காரப்பேட்டை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அலமேலு வயது (48) இவருக்கு ஏழுமலை (20) சேட்டு (18) என்று இரு மகன்கள் உள்ளனர். அலமேலு கணவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் இந்த நிலையில் அலமேலு மூத்த மகன் ஏழுமலை கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகிறார். எழுமலைக்கு அலமேலுவின் அண்ணன் அதே ஊரை சார்ந்த நடேசன் என்பவரது மகள் பவித்ரா வயது (20) என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பவித்ரா ஏழுமலை தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த சூழ்நிலையில் பக்கத்து வீட்டு சார்ந்த ராஜா என்பவரது மகன் மணிகண்டன் ஊத்தங்கரை வித்யா மந்திர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார் இவருக்கும் பவித்ராவிற்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு இதை அறிந்த அலமேலு இருவரையும் கண்டித்துள்ளார். சம்பவ நாளான நேற்று ஆடுமேய்க்க சென்ற பவித்ரா மாலை நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை தேடி ஆடு மேய்க்கும் இடத்திற்கு மாமியார் அலமேலு சென்றுள்ளார்.

அப்போது பவித்ரா மற்றும் கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகியோர் ஒன்றாக இருந்துள்ளனர் இதனை கண்ட அலமேலு ஆத்திரத்தில் அவர்களை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மற்றும் பவித்ரா இருவரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்துள்ளனர் பின்னர் வழக்கம்போல் இருவரும் வீட்டுக்கு சென்று அவரவர் வேலையை பார்த்துக் கொண்டுள்ளனர் கொத்தனார் வேலை முடித்துவிட்டு வீடு திரும்பிய அலமேலுவின் இளைய மகன் சேட்டு நீண்ட நேரம் ஆகியும் தாய் வீடு திரும்பாததால் அக்கம் பக்கம் உறவினர்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் தேடி வந்துள்ளார் எங்கும் அவர் கிடைக்காததால் விரக்தி அடைந்தவர் மீண்டும் தனது நன்பன் ராஜேந்திரன் என்பவருடன் இரவு எட்டு முப்பது மணி அளவில் மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று தேடி வந்த நிலையில் ஆங்காங்கே தீ எரிவதைக் கண்டு டார்ச் வெளித்தில் தேடி உள்ளார்.

அப்போது காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் இருந்த அலமேலுவின் உடலைக் கண்டு மிரண்டு போன இருவரும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்து உள்ளார் விரைந்து வந்த போலீசார் இரவு 10 மணியளவில் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் தொடர்ந்து சம்பவப் பகுதிக்கு ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட நிலையில் மணிகண்டன் மற்றும் பவித்ரா இருவரும் சேர்ந்து அலமேலுவை அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்தது கண்டறியப்பட்டு இருவரையும் சிங்காரப்பேட்டை காவல் துறையினர் இரவோடு இரவாக கைது செய்தனர். இது குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் விவகாரத்தில் மாமியாரை மருமகளும் கள்ளக்காதலன் சேர்ந்து அடித்து கொலை செய்து தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story