ஊத்தங்கரை அருகே பிரபல செயின் பறிப்பு கொள்ளையன் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி சாமல்பட்டி போச்சம்பள்ளி பாரூர் பர்கூர் நாகரசம்பட்டி காரிமங்கலம் உள்ளிட்ட காவல் நிலைய பகுதிகளில் 15 இடங்களில் சுமார் 35 பவுன் தங்க செயின் பறிப்பு நடைபெற்று.
அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது ஊத்தங்கரை டிஎஸ்பி பார்த்திபன் அறிவுரையின்படி கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி தலைமையில் ஊத்தங்கரை மற்றும் பர்கூர் இரண்டு போலீஸ் தனி படைகள் அமைக்கப்பட்டு செயின் பறிப்பு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்றது.
ஊத்தங்கரை தனிப்படை போலீசார் கல்லாவி ஆனந்தூர் சாலையில் ரோந்து பணியில் இருக்கும் போது அந்த வழியாக டூவீலரில் வந்த ஆசாமியை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள திண்டல் ஒடைச்சைகரையை சேர்ந்த நவீன்குமார் வயது 27 என்பது தெரிய வந்தது. அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரிடம் இருந்து 19 பவுன் தங்க நகைகள் 5 டூவீலர்கள் ஒரு டாட்டா ஏசி வேன் பறிமுதல் செய்யப்பட்டது. நவீனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்