செல்போன் பார்த்ததால் தந்தை கண்டிப்பு : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

செல்போன் பார்த்ததால் தந்தை கண்டிப்பு : இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

செல்போன் பார்த்ததை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட, பரமத்தி ரோடு, சிட்கோ காலனியை சேர்ந்தவர் குட்டி (எ) செல்வகுமார் (45). அவர், நகராட்சி, 23வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். அவர் வள்ளிபுரம் மேம்பாலம் அருகே பாடி பில்டர்ஸ் பட்டறை நடத்தி வருகிறார். அங்கு, அவரக்கு உதவியாக அவரது மகன் மனோஜ்குமார் (18) பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை, 1 மணிக்கு, மனோஜ்குமார், தனது தந்தை பட்டறையில், அவருக்கு உதவியாக பணியாற்றி வந்தார். அப்போது அவர் செல் போன் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அதை பார்த்த தந்தை செல்வகுமார், வேலை பார்க்காமல், செல் போன் எதற்கு பார்த்துக் கொண்டிருக்கிறாய் என மகனை கண்டித்ததாக தெரிகிறது. சிறிது நேரத்தில் செல்வகுமார் வீட்டுக்கு சென்றுவிட்டார். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் மகன் மானோஜ்குமார் வீட்டுக்கு வராததால், சந்தேகம் அடைந்த செல்வகுமார், மொபல் போனில் மனோஜ்குமாரை அழைத்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பட்டறைக்கு சென்று பார்த்தபோது, மகன் மனோஜ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், சடலமாக தொங்கிகொண்டிருந்தார். இது குறித்து, புகாரின் பேரில் நல்லிபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story