இரட்டை கொலை வழக்கில் தீயணைப்பாளா் கைது

இரட்டை கொலை வழக்கில் தீயணைப்பாளா் கைது

இரட்டை கொலை வழக்கில் தீயணைப்பாளா் கைது

இரட்டை கொலை வழக்கில் தீயணைப்பாளா் கைது

நாமக்கல் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் வேலூா் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்புச்சிபாளையம், குச்சிக்காடு தோட்டத்தைச் சேர்ந்த சண்முகம் அவரது மனைவி நல்லம்மாள் (எ) சின்னப்பிள்ளை ஆகியோர் 11,102023-ம் தேதி கொலை செய்யப்பட்டு இறந்தது சம்மந்தாக வேலூர் காவல்நிலையத்தில் கொலை வழக்கு (இரட்டை) பதிவு செய்யப்பட்டு நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின்பேரில், துணை கண்காணிப்பாளர் காவல் ஆய்வாளா் ஆகியோர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக சம்பவ இடம், சந்தேக நபர்கள், கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அறிவியல் பூர்வாயாகவும் தீவிர விசாரமண மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைபில் தீயணைப்பாளராக பணிபுரிந்து வரும் நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குப்புச்சிபாளைத்தை சேர்ந்த துரைராஜ் மகன் ஜனார்த்தனன் (32) என் சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், தனக்கு அதிகமாக கடன் தொல்லை உள்ளதாகவும், தன்னுடைய பணத் தேவைக்கு திருடுவதற்காக கடந்த 11.10.2023-ம் தேதி இரவு இறந்து போன சண்முகம் வீட்டிற்கு சென்று திருடும் போது சண்முகம் மற்றும் அவரது மனைவி நல்லம்மாள் (எ) சின்னப்பிள்ளை ஆகியோர் தடுத்ததாய் பக்கத்தில் இருந்த கடப்பாறையை எடுத்து தலையில் தாக்கி கொலை செய்து விட்டு பிறகு நல்லம்மாள் (எ) சின்னப்பிள்ளையிடம் இருந்த தாலி செயின் கூடிய 8 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக ஒப்புக் கொண்டத்தின் பேரில் தீயணைப்பாளர் ஜனார்த்தனன் நேற்று 25.12.2003-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். மேலும் மேற்படி இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து அறிவியல் பூர்வமாக தகுந்த ஆதாரங்களுடன் திறம்பட செயல்பட்ட அதிகாரிகள் மற்றும் தனிப்படையினரை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ்கண்ணன் வெகுவாக பாராட்டினார்.

Tags

Next Story