புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பலி

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பலி

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பலி

புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் ஐந்து பேர் பலி
புதுக்கோட்டை - திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நமணசமுத்திரம் என்ற இடத்தில் காவல் நிலையம் உள்ளது. இந்த காவல் நிலையம் எதிரே தனியாருக்கு சொந்தமான தேனீர் நிலையம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் நள்ளிரவு திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் சக்தி கோயில் பக்தர்களான 16 பேர் ராமேஸ்வரத்திற்கு ஒரு வேனில் வந்துள்ளனர். அதேபோல் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 22- பேர் பிள்ளையார்பட்டி கோவிலுக்கும், அதேபோல் திருக்கடையூர் என்ற ஊரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு காரில் 6-பேர் சென்றுள்ளனர் அவர்களும் இந்த இடத்தில் தேநீர் அருந்துவதற்காக தங்களது வாகனங்களை நிறுத்தி உள்ளனர் . அப்பொழுது அரியலூரில் இருந்து சிவகங்கை க்கு சிமெண்ட் ஏற்றி சென்ற ஈச்சர் லாரி அதன் ஓட்டுனர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சேர்ந்த மணிகண்டனின் கட்டுப்பாட்டை இழந்து தேநீர் கடையில் தேனீர் அருந்தி கொண்டிருந்த அவர்கள் மீது அதேபோல் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த இரண்டு வேன் காரில் அமர்ந்திருந்த நபர்கள் மீது ஒரு இரு சக்கர வாகனத்தின் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த ஓம் சக்தி கோயில் பக்தரான சாந்தி என்ற பெண் அமர்ந்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார் அதேபோல் தேநீர் அருந்து கொண்டிருந்த ஓம் சக்தி கோயில் பக்தரான ஜெகநாதன் அதேபோல் ஐயப்ப பக்தரான மதுரவாயிலை சேர்ந்த சுரேஷ் சென்னை சேர்ந்து சதீஷ் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன் ஆகிய ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் குறிப்பாக அதிவேகமாக சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் அடியில் பலியான நான்கு பேர் சிக்கி இருந்தனர் அவர்களை தீயணைப்புத் துறையினர் , காவல்துறையினரும் நீண்ட நேரம் போராடி ஈச்சர் வேனுக்குள் நான்கு பேர் சடலத்தை மீட்டனர். மேலும் ஜேசிபி, கிரேன், மரம் அறுக்கும் இயந்திரம், உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு இந்த மீட்பு பணி நடைபெற்றது. விபத்தில் பலியான ஐந்து பேரில் உடல்களை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது அதேபோல் விபத்தில் காயமடைந்த மூன்று வயது சிறுமி உட்பட 19 பேர் காயமடைந்தனர். அந்த 19 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதுகுறித்து பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான நமணசமுத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து முதல் கட்ட விசாரணையில் சிமெண்ட் ஏற்றி வந்த ஈச்சர் வேன் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது அந்த ஈச்சர் வேண் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த ஈச்சர் வாகனத்தில் பிரேக் பிடிக்காத காரணத்தினால் தான் இந்த விபத்து நடந்ததாக ஈச்சர் வேன் ஓட்டுனர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாரை-று சேர்ந்த மணிகண்டன் தெரிவித்துள்ளார். தற்பொழுது மணிகண்டனும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்த உள்ளனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story