பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
பாலியல் வன்கொடுமை வழக்கில் முதியவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை
நாமக்கல் மாவட்டம் வேலூர் உட்கோட்டம் பரமத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரமத்தி இளைஞர் தமிழர் மறுவாழ்வு முகாமில் கடந்த 2021 ஆம் ஆண்டு 11 வயது பெண் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் ஞானப்பிரகாசம் என்கிற அய்யாதுரை (69) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேற்படி வழக்கு விசாரணையானது நாமக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது அந்த தீர்ப்பில் நாமக்கல் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி முனுசாமி மேற்படி குற்றவாளிக்கு ஆறு வருட சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார் மேற்படி வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்து சிறப்பாக செயல்பட்ட பரமத்தி காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவலர்களை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.ராஜேஷ் கண்ணன் வெகுவாக பாராட்டினார்