சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த நான்கு பேர் கைது

சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த நான்கு பேர் கைது

கோப்பு படம் 

சென்னை கோயம்பேட்டில் போதை மாத்திரை விற்பனை செய்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் 753 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் கொலை மிரட்டல் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ஹரிஷ் என்கிற குள்ள ஹரிசை கோயம்பேடு காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் இவர் அடிக்கடி மும்பைக்கு சென்று வருவது தெரியவந்தது.

அதன் பேரில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த ஹரிஷ் மணிபாரதி மற்றும் ஜீவா, பிரவீன் குமார் ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 753 வழி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

யார் யாருக்கெல்லாம் போதை மாத்திரைகள் சப்ளை செய்யப்படுகிறது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். ஏற்கனவே ஹரிஷ் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story