ஆசிரியரிடம் மோசடி- கூட்டுறவு சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு

ஆசிரியரிடம்  மோசடி- கூட்டுறவு சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது வழக்கு

பைல் படம் 

சேலத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி ஆசிரியரிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்த கூட்டுறவு பெண் சார் பதிவாளர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.

சேலம் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் சீனிவாசன். இவர் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்து வீடு தேடி வந்தார். அப்போது அவருக்கு புதிய வீடு மற்றும் அதற்கான கடன் வசதி செய்து தருவதாக கூட்டுறவு சார்பதிவாளராக பணிபுரியும் பிரேமா என்பவர் அறிமுகமானார். தொடர்ந்து பிரேமா சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரிடம் ரூ .1 கோடி மதிப்பில் வீடு இருப்பதாகவும் அந்த வீட்டை கிரயம் செய்து தருவதாகவும் கூறி அவரை அறிமுகப்படுத்தினார்.

அதனை நம்பிய சீனிவாசன் கடந்த 2022- ம் ஆண்டு முதல் பல்வேறு தவணைகளாக சுப்பிரமணியன் வங்கி கணக்கில் ரூ. 32 லட்சத்து14 ஆயிரத்தை செலுத்தினார். ஆனால் அவர்கள் கூறிய படி கடன் வசதியும் செய்து கொடுக்கவில்லை, மேலும் புதிய வீட்டையும் சீனிவாசன் பெயரில் கிரயம் செய்து கொடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் வாங்கிய பணத்தையும் அவர்கள் திருப்பி கொடுக்கவில்லை. மேலும் மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சீனிவாசன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் மோசடி, கூட்டு சதி, மிரட்டல் உள்பட பல பிரிவுகளில் சுப்பிரமணியன், பிரேமா, அன்பரசன், முத்து , அமிர்தராஜ், நீலமேகம் மேகநாதன் ஆகிய 7 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story