கூட்டு பாலியல் வன்கொடுமை : 6 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

கூட்டு பாலியல் வன்கொடுமை : 6 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

உடுமலைப் பகுதியில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் 6 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 17 வயது சிறுமியை 9 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த மாதம் 11ஆம் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட உடுமலை சேர்ந்த யுவபிரகாஷ் ( 24 ), பவபாரதி( 22) பரணி குமார் (21)ஜெய காளீஸ்வரன் (19) மதன்குமார் (19 ) மற்றும் நந்தகோபால் (18 ) ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் எஸ்.பி அபிஷேக் குப்தா பரிந்துரை செய்திருந்தார். பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவு பிறப்புத்துள்ளார். உத்தரவைத் தொடர்ந்து 6 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story