ரயிலில் கடத்தி வரப்பட்ட 12 கிலோ கஞ்சா - 5 வடமாநிலத்தவர் கைது
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த முகமது அஜில் மியா(28) மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிர்மல் குமார் மோதி(32). ,ஜித்து கிஷான்(21), தரணி சாகூர் (21), அரவிந்து மோதி(23) ஆகிய ஐந்து பேரும் ரயில் மூலம் புவனேஸ்வரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி வந்துள்ளனர். அப்போது ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்திற்கு வந்தபோது ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் பயணிகளை பரிசோதனை செய்து வந்தனர் .
அப்போது இதனை அறிந்த ஐந்து பேரும் ரயிலில் நடை பாதைக்கு முன்னதாகவே இறங்கி அங்கிருந்து தப்பி வந்துள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானுக்கு பெரிய பெரிய பண்டல்கள் வைத்துக் கொண்டு சந்தேகத்தின் பேரில் 5 பேர் சுற்றி தெரிவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் உலகநாதன் ஜோலார்பேட்டை பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திறந்த ஐந்து பேரை பிடித்து பரிசோதனை செய்ததில் அவர்களிடமிருந்து கேரளாவுக்கு கடத்தி வந்த 12 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. பின்னர் 5 பேரையும் கைது செய்தனர் .முன்னதாக அவர்களிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.