மின்வாரிய அலுவலர் வீட்டில் தொடரும் ஆடு திருடும் கும்பல்

கெங்கவல்லி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் தொடரும் ஆடு திருடும் கும்பல்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி அருகே மின்வாரிய அலுவலர் வீட்டில் தொடர்ந்து 3 முறை ஆடுகள் திருட்டு குறித்து சிசிடிவி ஆதாரம் மூலம் புகார் தெரிவித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கெங்கவல்லி அருகே தெடாவூரில் உள்ள மின்வா ரிய துணை நிலையத்தில் மின்பகிர்வு பார்வை அலு வலராக பணியாற்றி வருபவர்துரைரமேஷ் இவர், தெடாவூர்-ஆத்தூர் சாலையில் வசித்து வருகிறார். அங்குள்ள தோட்டத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் தெடாவூர் பகுதியில் மின்வாரிய அலுவலரின் வீட்டில் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளை மர்மநபர் திருடிச் செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.பட்டியில் புகுந்து மர்ம நபர்கள் ஆடுகளை திருடிச் சென்றது குறித்து கெங்கவல்லி போலீசில் புகார் தெரிவிக்கப்பட் டது. இதன்பேரில், போலீசார்விசாரித்து சிசிடிவி கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, சிசிடிவி கேமராஅமைத்த நிலையில், 3வது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 ஆடுகளை மர்ம நபர் திருடிச்சென்றது சிசிடிவி கேமராவில் முழு மையாக பதிவாகியிருந்தது. இதை ஆதாரமாக கொண்டு கெங்கவல்லி எஸ்ஐ நிர்மலாவிடம் புகார் அளித்தனர். அவர்கிரைம் போலீசாரிடம் தக வல் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். சிசிடிவி கேமரா பொருத்தி ஆதாரத்துடன் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவதாக துரைரமேஷ் தெரிவித்துள்ளார்.மேலும் கெங்கவல்லிசுற்று வட்டாரத்தில் டூவீலர் மற்றும் ஆடு திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story