போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் தங்கம் திருட்டு
சுவாமிமலை அருகே உள்ள திருவலஞ்சுழி விஜிபி நகரில் வசித்து வருபவர் தனசேகர் மகள் கவிதா வயது 45, இவர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். காரைக்குடியில் பணியாற்றி வரும் நிலையில் எங்கு உள்ள தனக்கு சொந்தமான வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
சம்பவத்தன்று தனக்கு சொந்தமான திருவலஞ்சுழி வீட்டிற்கு வந்த பொழுது வீட்டின் முன் புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் ஆய்வாளர் கவிதா உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டின் உள்ளே இருந்த பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 3 கிராம் தங்கத்தோடு,
ஆறு வெள்ளி கொலுசுகள், ஒரு வெள்ளி தட்டு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டார்கள். உடனடியாக இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்கள்.