கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அரசு ஊழியர் கைது

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அரசு ஊழியர்  கைது

 தயானந்த் 

நம்பியூர் அருகே வீட்டிற்குள் புகுந்து பெண்ணின் கழுத்தை நெரித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தோட்டக்கலை துறை அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
நம்பியூர் அருகே உள்ள கேதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் வீட்டிற்குள் அதிகாலையில் புகுந்த மர்ம நபர் அந்த வீட்டிற்குள் படுத்திருந்த பெண்ணின் கழுத்தை நெறித்து கொள்ளை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.உடனடியாக நடராஜானின் மனைவி கூச்சலிட்டதால் நடராஜ் மற்றும் அவரது மகன் வெளியில் வந்துடன் தயானந்த் தப்பியோடினார்.சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தூர் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த தயானந்தை கைது செய்தனர்.இவர் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டார தோட்டக்கலை அலுவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story