போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது.

போக்சோ வழக்கில் அரசு பள்ளி ஆசிரியர் கைது.

ஆசிரியர் ஜியா உல் ஹக்

மேட்டூரில் பள்ளி மாணவிகளிடம் ஆபாச படங்களை காட்டி பாலியல் தொல்லை தந்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டூர் அருகே மேச்சேரி ஒன்றியத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஜியா உல் ஹக் (44) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் செல்போனில் ஆபாச புகைப்படங்களை காட்டி ஆசிரியர் ஜியாஉல் ஹக் பாலியல் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து தலைமை ஆசிரியர் தனம் மேச்சேரி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளி கிழமை புகார் அளித்துள்ளார்.

இதனை தெரிந்து கொண்ட ஆசிரியர் ஜியா உல் ஹக் மாயமானார். இந்த வழக்கு மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் சேலம் மாவட்டம் ,ஓமலூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் சுமித்ரா தலைமையில் அங்கு சென்ற போலீசார் ஆசிரியர் ஜியா உல் ஹக்கை கைது செய்து மேட்டூர் காவல் நிலையம் அழைத்து வந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story