சொத்துக்காக பாட்டியை கொலை செய்து விட்டு பேரன் தூக்கிட்டு தற்கொலை

சொத்துக்காக பாட்டியை கொலை செய்து விட்டு பேரன் தூக்கிட்டு தற்கொலை

கொலையான மூதாட்டி

திருவட்டார் அருகே சொத்துக்காக பாட்டியை கொலை செய்துவிட்டு பேரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவட்டார் அருகே சாரூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள். இவரது கணவர் பத்ரோஸ் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் இவர்களுக்கு புஷ்பராஜ் என்ற ஒரே மகன் உண்டு புஷ்பராஜ்க்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப தகராறு காரணமாக புஷ்பராஜின் மனைவி பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இவர்களுக்கு அஜித் என்ற ஒரே மகன் உண்டு.தாய் பிரிந்து சென்ற பிறகு புஷ்பராஜும் மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர் இந்த நிலையில் புஷ்பராஜ் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் இறந்து விட்டார் அதன் பிறகு பாட்டியும் பேரணும் ஒரோ வீட்டில் வசித்து வந்தனர்.தாசம்மாள் பெயரில் 15 சென்ட் நிலம் உள்ளது அந்த இடத்தை தன் பெயருக்கு எழுதி தரும் படி பேரன் தினமும் மது அருந்தி விட்டு வீட்டில் தினமும தகராறு செய்து வந்துள்ளார்.

நேற்று இரவு 11 மணி அளவில் மது போதையில் வந்த அஜித் தனது பாட்டியை தாக்கி சுவரோடு சேர்த்து கீழே தள்ளி விட்டார் இதில் தாசம்மாள் தலை சுவரில் மோதியதில் உயிரிழந்தார்.இதனால் பயந்த அஜித் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இன்று காலையில் தாசம்மாளின் அண்ணன் மகன் அந்த பகுதியில் வந்து பார்க்கும் போது அஜிதின் இருசக்கர வாகனம் கீழே விழுந்து கிடந்தது இதை பார்த்த அந்த வாலிபர் வீட்டின் உள்பகுதியில் சென்று பார்க்கும் போது பார்டி தாசம்மாள் சுவரில் மோதி இறந்து கிடைப்பதை பார்த்தார் பக்கத்து அறையில் அஜித் தூக்கில் தொங்கி நிற்பதை பார்த்தார்.

உடனே திருவட்டார் போலிசுக்கு தகவல் கொடுத்தனர் போலிசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அந்த பகுதியால் பரப்பரப்பானது.

Tags

Next Story