திருப்பூரில் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 7 பேர் கைது

திருப்பூரில் மூட்டை மூட்டையாக சிக்கிய குட்கா - 7 பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள் 

பெருமாநல்லூரில் போலீசார் நடத்திய சோதனையில் காரில் கடத்தி வரப்பட்ட 1658 கிலோ குட்காவை பறிமுதல் செய்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகி அதிலிருந்த குட்கா மூட்டைகள் சாலையில் சிதறியது வாகனத்தை ஓட்டிச் சென்ற நபர்கள் தப்பித்து ஓடிய நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பெருமாநல்லூர் போலீசார் தீவிர‌ வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் 239 மூட்டைகளில் 1658 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் பெங்களூரில் இருந்து அவிநாசிக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராஜஸ்தானை சேர்ந்த தினேஷ்குமார் (21), தினேஷ்குமார் (23), கேசவ்ராம்(26), மாதரம் (26), துதாரம்(24), கோபரம்(35), ஓப்ரம்(30) என்ற ஏழு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story