சொகுசு காரில் குட்கா கடத்தல் - 1 டன் பறிமுதல், இருவர் கைது

சொகுசு காரில் குட்கா கடத்தல் - 1 டன் பறிமுதல், இருவர் கைது

கைது செய்யப்பட்டவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட கார் 

பெங்களூரில் இருந்து எடப்பாடிக்கு சொகுசு காரில் கடத்திவரப்பட்ட ஒரு டன் குட்கா பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். சோதனையின் போது தப்பியோடிய வடமாநில வாலிபர்களை பொதுமக்கள் உதவியுடன் விரட்டி பிடித்து கைது செய்தனர்.

சேலம் மாவட்டங்களுக்கு பெங்களூர் மற்றும் வடமாநிலங்களில் இருந்து குட்கா பொருள்கள் கடத்தி வரப்படுவதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் செட்டிமாங்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் அழகுராஜ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது சொகுசு காரை நிறுத்தி சோதனைகளை செய்தனர். வாகனத்தில் இருந்த இரண்டு வாலிபர்கள் தப்பி ஓடி உள்ளனர் அப்போது அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் தனிப்பட்ட போலீசார் துரத்தி சென்று பிடித்தனர் பின்னர் அவர்கள் வந்த காரை சோதனையிட்டபோது 5 லட்சம் மதிப்புள்ள 1050 கிலோ எடையுள்ள ஹான்ஸ் குட்கா பொருட்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்து எடப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் விசாரணையில் மகாராஷ்டிராவை சேர்ந்த நாரியண்சிகா (30), மற்றும் ராஜஸ்தானை சேர்ந்த ராமாராம் (22) என்பது தெரியவந்ததை தொடர்ந்து எடப்பாடி காவல் ஆய்வாளர் சந்திரலேகா இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story