குவியல் குவியலாக மதுபாட்டில்கள் பறிமுதல்

குவியல் குவியலாக மதுபாட்டில்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் 

சீர்காழி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,350 புதுச்சேரி மாநில மது பாட்டில் மற்றும் 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் பதுக்கி வைத்த பெண்ணை கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அளக்குடி பில்படுகை கிராமத்தில் வீட்டில் பதுக்கி வைத்து மதுபானங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் படி,திடீர் சோதனை செய்தனர். அப்போது 180 மி.லி, 90 மி.லி. அளவுக் கொண்ட புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் 2350 எண்ணிக்கையிலும், புதுச்சேரி சாராயம் 110 லிட்டரும் வீட்டில் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த குமுதவல்லி என்ற பெண்ணையும் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய நபரை தேடி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மதுபானங்களில் மொத்த மதிப்பு ரூபாய் 3 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்

Tags

Next Story