ரேஷன் அரிசி பதுக்கல் - மாவு மில்லுக்கு அதிகாரிகள் சீல்

ரேஷன் அரிசி பதுக்கல் - மாவு மில்லுக்கு அதிகாரிகள் சீல்

அதிகாரிகள் விசாரணை 

கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த மாவு மில்லுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே அத்தை கொண்டான் தெருவில் உள்ள மாவு மில்லில் ரேஷன் அரிசியை முறைகேடாக வாங்கி இருப்பு வைத்து மாவாக மற்றும் குருணையாக வைத்து இருப்பதாக வந்த தகவலின் பேரில் கோவில்பட்டி தாசில்தார் லெனின் தலைமையில் அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

அப்போது அங்கு 82 கிலோ ரேஷன் அரிசியும், மதுரைக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த 3.1 டன் குருணை ஆக்கப்பட்ட ரேஷன் அரிசியும் இருந்ததை கண்டுபிடித்தனர். மில் உரிமையாளர் ராமமூர்த்தியிடம் ரேஷன் அரிசி குறித்து தாசில்தார் லெனின் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார். சரியான ஆவணங்களையும் காட்டத் தவறினார். இதையடுத்து, ரைஸ் மில்லுக்கு ஆலம்பட்டி வி.ஏ.ஓ., வேல்சாமி, கிராம உதவியாளர் கற்பகம் ஆகியோர் சீல் வைத்தனர். சோதனையின்போது, கோவில்பட்டி வட்ட வழங்கல் அலுவலர் பொன்னம்மாள், துணை தாசில்தார் அகஸ்டீன் பாலன் மற்றும் கோவில்பட்டி மேற்கு போலீசார் உடன் இருந்தனர்.

Tags

Next Story