கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூடு: போலீசார் விசாரணை

கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூடு: போலீசார் விசாரணை
கால்வாயில் கிடந்த எலும்பு கூடுகள்
குலசேகரம் அருகே கல்வெட்டான்குழி பகுதியில் கால்வாயில் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த கல்வெட்டான்குழி பகுதியில் பேச்சிப்பாறை அணை நீர் செல்லும் கால்வாய் உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.

எப்போதும் ஆள் நடமாட்டம் மிகுந்த இந்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் கால்வாயில் மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் குலசேகரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மனித எலும்புக்கூடு கலந்த சம்பவம் தீயாய் பரவியதை தொடர்ந்து அங்கு ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர் .

சம்பவ இடத்திற்குச் சென்ற குலசேகரம் போலீசார் அப்பகுதி மக்களிடையே விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நாகர்கோவிலில் இருந்து தடைவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது.

குடியிருப்புகளுக்கு இடையே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story