சட்டவிரோத மது விற்பனை - 4 பேர் கைது, 860 பாட்டில்கள் பறிமுதல்
கைது செய்யப்பட்டவர்கள்
திருவள்ளுவர் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகள் விடுமுறை விட பட்டிருந்தது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவதாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து பள்ளிபாளையம் போலீசார் கள்ளத்தனமாக மது விற்பனை செய்யப்படுவதை தடுக்க பல்வேறு சோதனைகளில் ஈடுபட்டனர்.
அப்பொழுது பள்ளிபாளையம் அருகே உள்ள தெற்குபாளையம் பகுதியில் கள்ளத்தனமாக இனிப்பு பெட்டிகளுக்கிடையே மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்தனர். கள்ளத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை, ரவிசங்கர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஐந்து பனை பகுதியில் வீட்டில் வைத்து கள்ளதனமாக மதுபானம் விற்பனை செய்த அழகுபாண்டி, வடிவேலு உட்பட நான்கு நபர்களை பள்ளிபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து மொத்தம் 860 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 40 ரூபாய் ஆயிரம் என பள்ளிபாளையம் போலீசார் தெரிவித்தனர்.