நகை கொள்ளை வழக்கில் குடிபோதை மறுவாழ்வு மைய பொறுப்பாளர் கைது

நகை கொள்ளை வழக்கில் குடிபோதை மறுவாழ்வு மைய பொறுப்பாளர் கைது

சேலத்தில் நகை கொள்ளை வழக்கில் குடிபோதை மறுவாழ்வு மைய பொறுப்பாளர் கைது

சேலத்தில் நகை கொள்ளை வழக்கில் குடிபோதை மறுவாழ்வு மைய பொறுப்பாளர் கைது
சேலத்தில் குடிபோதை மறுவாழ்வு மைய உரிமையாளரை தாக்கி பணம், நகையை கொள்ளையடித்து விட்டு தலைமறைவான அந்த மையத்தின் பொறுப்பாளரை போலீசார் கைது செய்தனர். சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 41). இவர் அந்த பகுதியில் குடிபோதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். இந்த மைய பொறுப்பாளராக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முல்லாக்காடு, மங்களாபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (50) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த மையத்தில் 12 பேர் தங்கி சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் மற்றும் பொறுப்பாளர் செல்வராஜ் ஆகியோர் சேர்ந்து உரிமையாளர் தீபக்கை தாக்கி அவர் அணிந்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான 4 பவுன் நகைகள், ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர். இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் வழக்குப்பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வந்தார். இந்த நிலையில் ராசிபுரத்தில் பதுங்கி இருந்த மறுவாழ்வு மைய பொறுப்பாளர் செல்வராஜை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story