ரூ.2.50 கோடி மோசடி வழக்கில், பெண் கவுன்சிலர் கணவருடன் போலீசில் ஆஜர்

ரூ.2.50 கோடி மோசடி வழக்கில், பெண் கவுன்சிலர் கணவருடன் போலீசில் ஆஜர்

ரூ.2.50 கோடி மோசடி வழக்கில், பெண் கவுன்சிலர் கணவருடன் போலீசில் ஆஜர்

ரூ.2.50 கோடி மோசடி வழக்கில், பெண் கவுன்சிலர் கணவருடன் போலீசில் ஆஜர்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி 12 வது வார்டு சுயேட்சை கவுன்சிலராக இருப்பவர் சசிரேகா. இவரது கணவர் சதீஷ். இவர் தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாகவும் ஆசைகாட்டியும், தான் ஹெலிக்காப்டர் வாடகைக்கு விடும் தொழில் செய்வதாக கூறி பலரிடம் பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி திமுக செயலாளரும் மோகனூர் பேரூராட்சி 2 வார்டு கவுன்சிலருமான செல்லவேல் (எ) செல்லப்பனிடம் பல்வேறு தவணையில் ரூ.2.50 கோடி சசிரேகா பணம் பெற்றுள்ளார். கொடுத்த பணத்தை செல்லப்பன் திரும்ப கேட்டுள்ளார். பணத்தை திரும்ப தருவதாக சொல்லி, சசிரேகா இழுத்தடித்து உள்ளனர். பணத்தை திரும்ப தராததால் செல்லப்பன் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி.ராஜேஸ்கண்ணனிடம், ராசிபுரம் கவுன்சிலர் சசிரேகா அவரது கணவர் சதீஷ் மற்றும் உறவினர் வெங்கடாஜலபதி மீது கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணைக்கு வருமாறு சதீஷ் மற்றும் அவரது மனைவி கவுன்சிலர் சசிரேகாவுக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 14 ந் தேதி ராசிபுரம் நகராட்சி நகர மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் உள்ளே இருந்த 12-வது வார்டு கவுன்சிலர் சசிரேகாவை நாமக்கல் குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவுக்கு அழைத்து சென்று 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கவுன்சிலர் சசிரேகா வின் கணவர் சதீஷ் கடந்த மாதம் 20 ந் தேதி நேரில் ஆஜரானார். அவரிடம் போலீசார் சுமார் 4 மணி நேரம் வரை விசாரணை நடத்தினர். பின்னர் அவரை விடுவித்தனர். கவுன்சிலர் சசிரேகா அவரது கணவர் சதிஷ் உறவினர் வெங்கடாஜலபதி ஆகிய 3 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இரண்டு பிரிவுகள் (ஐ.பி.சி 420, 506/1) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இன்று கவுன்சிலர் சசிரேகா அவரது கணவர் சதீஷ் ஆகியோர் நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேரில் ஆஜர் ஆகினர். இருவரிடமும் போலீசார் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் இருவரையும் விடுவித்தனர். நாளை (5-12-2023) காலை இரண்டு பேரும் மீண்டும் நேரில் ஆஜர் ஆக போலீசார் உத்தரவு பிறப்பித்துள்ளனர். கவுன்சிலர் சசிரேகா சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியின், மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story