திமுக பிரமுகர் வீடு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திமுக பிரமுகர் வீடு அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

திமுக பிரமுகருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!

திமுக பிரமுகருக்கு சொந்தமான நிறுவனம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை!
சென்னை,மதுரை, கோவை,ஈரோடு,சேலம், நாமக்கல்,விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இடங்கள் வருமான வரித் துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் பட்டணம் புதூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.பட்டணம் பகுதியில் ரியல் வேல்யு ப்ரமோட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வரும் திமுகவைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.சோதனை நடைபெறும் அலுவலகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல ரியல் வேல்யு ப்ரமோட்டர்ஸ் உரிமையாளர் ராமநாதன் மகன் சொர்ண கார்த்திக் இல்லம் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வீடுகளிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story