சிவில் காண்ட்ராக்டர் ஆபீஸ் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு

சிவில் காண்ட்ராக்டர் ஆபீஸ் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை ரெய்டு

நாமக்கல் பிரபல சிவில் காண்ட்ராக்டர் ஆபீஸ் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு

நாமக்கல் பிரபல சிவில் காண்ட்ராக்டர் ஆபீஸ் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு

நாமக்கல்லில் உள்ள பிரபல சிவில் காண்ட்ராக்டருக்கு சொந்தமான ஆபீஸ் மற்றும் வீட்டில் வருõமன வரித்துறை அதிகாரிகள் திடீர் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

நாமக்கல்லைச் சேர்ந்தவர் வி.சத்தியமூர்த்தி. இவர் சத்தியமூர்த்தி அண்ட் கோ என்ற பெயரில் சிவில் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். நாமக்கல் முல்லை நகரில் இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளரின் வீடு அமைந்துள்ளது. நாமக்கல், சென்னை, கோவை, நீலகிரி உள்ளிட்ட இடங்களில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், குடிநீர் வாரியம் உள்ளிட்ட துறைகளில், டெண்டர் மூலம் ஒப்பந்தம் பெற்று கட்டிடங்களை கட்டி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரூ. ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் இவரது நிறுவனத்தின் மூலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு அலுவலகம் மற்றும் வீடுகள் உள்ளன.

இன்று (02-01-2024) செவ்வாய்கிழமை காலை 11 மணியளவில், நாமக்கல் மற்றும் சென்னையில் உள்ள சத்தியமூர்த்திக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள், ஒரே நேரத்தில் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனை நடைபெறும் இடங்களில் துப்பாக்கிய ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) காவலில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமூர்த்திக்கு சொந்தமான அலுவலகங்களில் உள்ள சொத்த ஆவணங்கள், கணக்கு நோட்டுகள், டைரிகள், லேப்டாப்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை அதிகாரிகள் கைப்பற்றி அவற்றை சோதனையிட்டு வருகின்றனர். நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் அதிகாரிகள் துருவித்துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக, தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட, ரியல் எஸ்டேட் மற்றும் சிவில் காண்ட்ராக்டர்கள் ஆபீஸ்கள் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சத்தியமூர்த்தியின் நிறுவனங்களிலும், வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் நடைபெறும் வருமான வரித்துறை சோதணையால் தொழில் அதிபர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags

Next Story