இந்தியன் ஆயில் கம்பெனிக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் -நுகர்வோர் கோா்ட் அதிரடி

இந்தியன் ஆயில் கம்பெனிக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் -நுகர்வோர் கோா்ட் அதிரடி

இந்தியன் ஆயில் கம்பெனிக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் - நாமக்கல் நுகர்வோர் கோா்ட் அதிரடி

இந்தியன் ஆயில் கம்பெனிக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் - நாமக்கல் நுகர்வோர் கோா்ட் அதிரடி

பெட்ரோல் விற்பனையை அதிகரிக்க, குலுக்கல் முறையில் பரிசுத் திட்டம் அறிவித்த, இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் வசிப்பவர் சுப்பராயன் (78), இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நாமக்கல் திருச்செங்கோடு ரோட்டில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோல் பங்க்கில், தனது டூ வீலருக்கு ரூ. 200க்கு பெட்ரோல் போட்டார். அப்போது அவருக்கு ஒரு வார இதழும், ஒரு அறிவுத்திறன் பரிசுக் கூப்பனும் இலவசமாக வழங்கப்பட்டது. பரிசு கூப்பனில் மூன்று கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அவற்றிற்கு பதில் அளித்து பெட்ரோல் பங்கில் உள்ள பெட்டியில் போட்டால், நிபந்தனை அடிப்படையில் சரியான பதில் வழங்கும் 8 பேருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும் என்றும், 8க்கும் மேற்பட்ட நபர்கள் சரியான பதிலை எழுதி இருந்தால், குழுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வணிக நிறுவனங்கள், விற்பனையை அதிகரிப்பதற்காக, குலுக்கல் மூலம் பரிசுகளை வழங்கும் திட்டத்தை நடத்துவது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நேர்மையற்ற வணிக நடைமுறை என்றும் தமிழ்நாடு பரிசு சீட்டுகள் தடை சட்டப்படியும் குற்றம் எனக் கூறி தனக்கு, ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்பராயன் கடந்த 2018 ஆம் ஆண்டில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட் நீதிபதி டாக்டர் ராமராஜ் மற்றும் உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். விற்பனையை அதிகரிக்க குலுக்கல் முறையில் பரிசு வழங்குவதாக கூறி பரிசு கூப்பன்களை வழங்குவது நேர்மையற்ற வணிக நடைமுறை என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் வழக்கு தாக்கல் செய்தவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் வழக்கின் செலவு தொகையாக ரூ. 5 ஆயிரத்தை இந்தியன் ஆயில் நிறுவனம், 4 வாரத்தில் சுப்பராயனுக்கு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags

Next Story