சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை சாவு- கல் நெஞ்ச தாய்க்கு வலை

சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை சாவு-  கல் நெஞ்ச தாய்க்கு வலை

அரசு மருத்துவமனை 

திருமயம் அருகே சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை வீசி சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இருந்து நமணசமுத்திரம் வழியாக திருச்சி செல்லும் காரைக்குடி- திருச்சி பைபாஸ் சாலை வழி யாக நேற்றுமுன்தினம் மாலை ஏனப்பட்டி கிராமத்தை சேர்ந்த பூபதியம்மாள் என்ற பெண் சொந்த வேலை காரணமாக புதுக்கோட்டைக்கு சென்றுள்ளார். அப் போது வெள்ளாறு பாலம் அருகே குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது.

தொடர்ந்து அப்பகுதியில் பூபதியம்மாள் தேடி பார்த்தபோது பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று துணியில் சுற்றியவாறு கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூபதியம்மாள், அந்த குழந்தையை மீட்டு திருமயத்தில் உள்ள அவ ருக்கு தெரிந்த மருத்துவர் ஒருவரிடம் காண்பித்தார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மருத்துவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுறுத் தியுள்ளார். தொடர்ந்து பூபதியம்மாள், குழந்தையை காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுதொடர்பாக நமணசமுத்திரம் விஏஓ பெலிக்ஸ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் நமணசமுத்திரம் போலீசார் வழக்கு பதிந்து இறந்த பச்சிளம் குழந்தையின் தாயை தேடி வருகின்றனர்.

Tags

Next Story