பெருமாள்மலையில் அரசுபள்ளி ஆசிரியரிடம் 3பவுன் நகை பறிப்பு

பெருமாள்மலையில் அரசுபள்ளி   ஆசிரியரிடம் 3பவுன் நகை பறிப்பு

காவல் நிலையம் 

பெருமாள்மலையில்  அரசுபள்ளி ஆசிரியரிடம்3 பவுன் நகை  பறித்த அடையாளம் தெரியாத மர்மநபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த தாராபுரம் சாலையில் உள்ள சக்தி நகரில் வசித்து வருபவர் வனிதா மார்கரேட் 56. இவரது கணவர் ரத்தினசாமி. வனிதா காங்கேயத்திலுள்ள ராசா பாளையத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தினமும் காலை9 மணிக்கு பள்ளிக்கு சென்று சுமார் 5 மணி வீடு திரும்புவது வழக்கம். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் காலை சுமார்‌ 9மணி அளவில் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது திருப்பூர் சாலை சிவன்மலை அருகே பெருமாள்மலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் வனிதா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து கொண்டு இருசக்கர வாகனத்தில் கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றுள்ளார்.

மேலும் ஆசிரியை அணிந்திருந்த தங்க சங்கிலி 5 ¼ பவுன் ஆகும் தங்க நகையை பறிக்கும் போது சங்கிலி முறிந்து 3 பவுன் தங்க நகை மட்டுமே திருடன் பறித்துச்சென்றுள்ளான். மீதியுள்ள 2 ¼ பவுன் தங்கசங்கிலி ஆசிரியர் அணிந்திருந்த ஆடைக்குள்ளே விழுந்துள்ளது.இதனை அடுத்து ஆசிரியர் கூச்சலிடவே அங்கு கூட்டம் கூடியது சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து ஆசிரியர் பள்ளிக்கு சென்றுவிட்டு நேற்று மாலை 5.30 மணியளவில் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த சம்பவம்‌ குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story