ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் நகைகள் பறிமுதல்

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை வழக்கில் நகைகள் பறிமுதல்-காவல் ஆணையர் பேட்டி.
கோவை:மாநகர பகுதியில் வழிப்பறி மற்றும் திருட்டு போன செல்போன்கள் மீட்க்கப்பட்டு அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு போத்தனூர் காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு திருட்டு போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநகர காவல் ஆணையர் கூறுகையில், கோவை போத்தனூர் சரகத்திற்கு உட்பட்ட மூன்று காவல் நிலைய எல்லைகளில் பொதுமக்கள் தவறவிட்ட 57 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புகையிலையில்லா மாவட்டம் என்ற இலக்கில் அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து பணிகளை தீவிரபடுத்தியுள்ளது. இதுவரை மாநகர பகுதியில் 20க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைக்கப்பட்டு கடையின் வணிக உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகர கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் தேடப்படும் விஜய்யின் மாமியர் யோகராணியை தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவரிடமிருந்தும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story