கன்னியாகுமரி: மாணவி பலாத்காரம் - உடற்கல்வி ஆசிரியர் கைது

கன்னியாகுமரி: மாணவி பலாத்காரம் - உடற்கல்வி ஆசிரியர் கைது
கைதான சுந்தர் சிங்
கோட்டாரில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர் சுந்தர் சிங் (32). இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு குழந்தை உள்ளது. இவர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து, அங்கேயே வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டருகே வசிக்கும் பிளஸ் ஒன் மாணவி அதே பள்ளியில் படித்து வருகிறார். இதனால் மாணவி குடும்பத்தாருடன் நெருக்கமாக பழகியுள்ளார். மேலும் சுந்தர் சிங் அந்த மாணவிக்கு செல்போன் உட்பட பல பொருட்கள் வாங்கி கொடுத்து, பழகுவது போல் நடித்து அவரிடம் அத்து மீறத்தொடங்கியுள்ளார். சம்பவத்தன்று மாணவி அவரது வீட்டில் தனியாக இருக்கும் போது, அங்கு சென்ற சுந்தர்சிங் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து மாணவி பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து மாணவியின் தாயார் கன்னியாகுமரி மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சுந்தர் சிங் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு செய்து விசாரணை மேற்கொண்டு,அவரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

Tags

Next Story